ஃபோர்ட்நைட் கேம் செயலியின் உருவாக்குனர்களான எபிக் கேம்ஸ் பதிவிறக்கங்களுக்காக கூகுளுக்கு 30 விழுக்காடு வருவாய் விட்டு கொடுக்க நிறுவனம் விரும்பாததால், தங்களின் வலைதளத்தின் மூலமே கைப்பேசி விளையாட்டை தொகுப்பாக்கம் (HOST) செய்ய விரும்பியது. கூகுள் தங்கள் நிலையிலிருந்து மாறாததால் ப்ளே ஸ்டோர் மூலமாகவே விளையாட்டைக் கிடைக்கச் செய்வது நல்லது என்ற முடிவுக்கு எபிக் கேம்ஸ் நிறுவனம் வந்துள்ளது.
இருப்பினும், எபிக் கேம்ஸ், அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம், எக்ஸ்.டி.ஏ (XDA) (உருவாக்குநர்கள்)டெவலப்பர்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதில், கூகுள் அதன் ப்ளே ஸ்டோர் செயலி அமைப்புக்கு வெளியே, தங்கள் பயன்பாட்டைத் தொடங்க முயற்சிக்கும் எந்தவொரு உருவாக்குனருக்கும், அதை கையாள கடினமாக இருப்பது என்பது தெளிவாக தெரிகிறது.
அமேசான் உள்ளூர் கடைகள்: சிறு வணிகர்களை இணைக்கும் பன்னாட்டு நிறுவனம்!
ஏனெனில், மூன்றாம் தரப்பு பயன்பாட்டு ஸ்டோர் அல்லது வலைதளத்திலிருந்து பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்வது தீம்பொருள் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கூகுள் பொறுப்பேற்காது என்றும் பலமுறை தெரிவித்துள்ளது.
-
Fortnite is now available on the Google Play Store.
— Fortnite (@FortniteGame) April 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Check it out now! pic.twitter.com/EOA3jpMIu8
">Fortnite is now available on the Google Play Store.
— Fortnite (@FortniteGame) April 21, 2020
Check it out now! pic.twitter.com/EOA3jpMIu8Fortnite is now available on the Google Play Store.
— Fortnite (@FortniteGame) April 21, 2020
Check it out now! pic.twitter.com/EOA3jpMIu8
இதுபோன்ற சூழ்நிலையில் பணிபுரிவது கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் செயலியை வழங்கும்படி கட்டாயப்படுத்துவதாகவும், அதே நேரத்தில், செயலிக்கான பதிவிறக்க இணைப்பை அதன் வலைதளத்தின் மூலமாக தொடர்ந்து வழங்குவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Realme X50 Pro 5G: ரியல்மி X50 புரோ 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
கூகுள், ஆப்பிள், அதன் பிரத்யேக ஆப் ஸ்டோர்களுடன், தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட தளத்தைக் கொண்டு இயங்கிவருகின்றன. இது உருவாக்குநர்களை தங்கள் கோரிக்கைகளுக்கு உட்படும்படி கட்டாயப்படுத்துவதாகத் தெரிகிறது.
எது எப்படி இருந்தாலும், ஆண்ட்ராய்டு கேமர்களுக்கு ஃபோர்ட்நைட் கிடைத்ததில் மகிழ்ச்சிதான்.