அமேசான் எக்கோ ஷோ, ஃபேஸ்புக் போர்ட்டல் மற்றும் கூகுள் நெஸ்ட் ஹப் மேக்ஸ் ஆகியவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் பரவலாக பயன்படுத்தப்படும் வீடியோ கான்ஃபரன்சிங் தளமான ஜூம் செயலியை ஆதரிக்கும் என்று நிறுவனம் அறிவித்த நிலையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜூம் பல்வேறு புதிய சாதனங்களுக்கு தங்களின் தளத்தை விரிவுப்படுத்தவுள்ளது.
இதன்மூலம் பல உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய அழைப்புகளை பயனர்கள் மேற்கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், ஒலியை கொண்டே காணொலி அழைப்புகளை இலகுவாக மேற்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.