ETV Bharat / lifestyle

ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் புதிய முறை - தொடாமல் பணம் எடுக்கும் முறை

மும்பை: ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தைத் தொடாமலேயே பணம் எடுக்கும் புதிய முறையை பரிசோதனை செய்துவருவதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Withdraw cash at ATMs using your smartphone

author img

By

Published : Jun 8, 2020, 7:53 PM IST

கோவிட்-19 பரவல் காரணமாக பொது இடங்களிலுள்ள பொருள்களை தேவையின்றி தோட வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் பணம் எடுக்க ஏடிஎம் இயந்திரத்தை நிச்சயம் பொதுமக்கள் தொட வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதுமுள்ள ஏடிஎம் மையங்களை நிர்வகிக்கும் ஏஜிஎஸ் தொழில்நுட்ப நிறுவனம் (AGS Transact Technologies) ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தைத் தொடாமலேயே பணத்தை எடுக்கும் புதிய முறையை பரிசோதனை செய்துவருவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, வங்கியின் செயலியைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்திலுள்ள QR codeஐ தங்கள் ஸ்மார்ட்போனைில் வாடிக்கையாளர்கள் ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர், QR Cash Withdrawal என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து எடுக்க வேண்டிய பணம், பாஸ்வோர்ட் ஆகியவற்றை ஸ்மார்ட்போனில் பதிவிட வேண்டும். அப்படி செய்தால் ஏடிஎம்-ஐ தொடமலேயே ஒருவரால் பணத்தை எடுக்க முடியும்.

இந்த செயல்முறை தற்போது சோதனை அடிப்படையில் விருப்பப்படும் வங்கி ஏடிஎம்களில் மட்டும் பரிசோதனை செய்யப்படுவதாக ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறையின் மூலம் ஏடிஎம் கார்ட்டுகளிலுள்ள தகவல்களும் பாதுகாக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் உள்ள சுமார் 72 ஆயிரம் ஏடிஎம் மையங்களை AGS Transact Technologies நிறுவனம் தற்போது பராமரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குவியும் முதலீடுகள்: ஜியோ தளங்களில் ரூ.5,683 கோடி ஏடிஐஏ முதலீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.