வாஷிங்டன் (அமெரிக்கா): உடனடி குறுந்தகவல் அனுப்பும் சமூக வலைதளமான வாட்ஸ்அப் தனது புதிய பீட்டா பதிப்பில், கியூஆர் குறியீடு மூலம் தொடர்புகளை (Contacts) இணைத்துக் கொள்ளக்கூடிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பீட்டா பதிப்புகளின் வழியாக பொது தளத்திற்கு வரவுள்ள அம்சங்களை சோதிக்கும் பழக்கத்தினை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம், தனது சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் தனது பயனர்களுக்கான க்யூஆர் குறியீடு வசதியை அறிமுகம் செய்துள்ளது.
Moto G8 Power Lite மிரட்டலான கேமரா, பேட்டரி கொண்டு ரூ.8,999க்கு புதிய மோட்டோ போன்!
ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய கியூஆர் குறியீடு அம்சமானது, இப்போது வாட்ஸ்அப் பீட்டா v2.20.171 வழியாக அணுக கிடைக்கிறது. இந்த பதிப்பைப் பெற விரும்பும் எவரும், கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று பீட்டா பயனராக தங்களை இணைத்துக்கொண்டு, அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
வாட்ஸ்அப்-க்கான ஆண்ட்ராய்டு பீட்டாவில், அமைப்புகள் பட்டியலில் (Settings menu) உள்ள சுயவிவரம் (Profile) பகுதியிலிருந்து பயனர்கள் அவர்களுக்கான கியூஆர் குறியீட்டை அணுகலாம். ஸ்கேன் செய்யும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை கொண்ட நண்பர்களுடன், உங்கள் வாட்ஸ்அப் நம்பரை பெற குறிப்பிட்ட க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதும்.