ETV Bharat / lifestyle

வாட்ஸ்அப்பின் புதிய கொள்கை: யார் அங்கே ஜன்னலில் எட்டிப் பார்ப்பது? - வாட்ஸப்பின் புதிய பிரைவசி பாலிசி கொள்கை

வாட்ஸ்அப்பின் புதிய கொள்கை குறித்தான செய்திகள் அண்மையில் இணையத்தில் வலம் வந்து பலரையும் பீதியடையச் செய்தன. இதையடுத்து பலரும் சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு மாறினர். இதன் பிறகு வாட்ஸ்அப் அதன் கொள்கையை மாற்றிக்கொண்டது. அது குறித்தான விரிவான தகவல்களை பார்க்கலாம்...

whatsapp privacy policy overview
whatsapp privacy policy overview
author img

By

Published : Jan 17, 2021, 7:58 PM IST

இது ஒருவிதமான காதல்கதை; ஆனால் நிஜத்தில் காதல் புளித்துப்போன கதை. வாட்ஸ்அப் என்னும் செயலியின்மீது நாம் காதல் கொண்டோம்; எப்போது? சொல்லடுக்குச் செய்திகளும், தரவுத் திட்டங்களும் இப்போது சல்லிசான விலையில் கிடைப்பது போல அப்போது கிடைக்கவில்லை.

செய்திப் பெட்டிகளில் அந்தரங்க செய்திகளைவிட விளம்பரச்சொற்களே நிரம்பிவழிந்து கொண்டிருந்தன. அப்போதுதான் இலவசமான தூதுச்செயலியாக வாட்ஸ்அப் வரமாய் வந்தது; “உங்கள் அந்தரங்கத்தின் மீதான மரியாதை எங்கள் மரபணுக்களில் சங்கேதமாக உள்ளுறைந்திருக்கிறது. வாட்ஸ்அப்பை ஆரம்பத்திருக்கிறோம், வலுவான அந்தரங்கம் சார்ந்த கொள்கைகளுடன் கூடிய சேவையைக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு,” என்று முழங்கிக்கொண்டே அந்தச் செயலி அகிலமெங்கும் உருவானது. நமக்கு அது பிடித்துப் போனதால், வெறும் சொல்சார்ந்த செய்திச் சேவையிலிருந்து வாட்ஸ்அப்பிற்கு மடைமாறினோம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு தசாப்தம் கழித்து இப்போது ’அந்தரங்கத்தின் மீதான அந்த மரியாதை’ எங்கே போனதென்று தெரியவில்லை. அது சம்பந்தமான ஷரத்து வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட புதிய கொள்கையில் தற்போது காணாமல் போய்விட்டது. பயனாளர்களின் தகவல் அந்தரங்கம் பற்றிய கவலைகள் அதிகரித்துவிட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக, ”தொடர்ந்து இந்தச் சேவை உங்களுக்கு வேண்டுமென்றால், இந்தப் புதிய கொள்கைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்,” என்று வாட்ஸ்அப் வலியுறுத்துவது வாட்டத்தைக் கொடுக்கிறது.

அதாவது, தொடர்ந்து இச்சேவையைப் பிரயோகித்தால், பயனாளர்கள் தங்கள் தகவல் அந்தரங்கத்தை முகநூல் நிறுவனங்களிடம் இழக்க நேரிடும்;; இல்லையென்றால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் 2021 ஃபிப்ரவரி 8-க்குள் நீக்கப்பட்டுவிடும். எப்படிப் பார்த்தாலும் இந்த விளையாட்டில் பயனாளர் மட்டுமே தோல்வியாளர் என்று சந்தேகத்திற்கு இடமின்றித் தோன்றுகிறது.

வாட்ஸ்அப்பின் புதிய கொள்கைமீது ஏனிந்த வருத்தம்?

உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், ’சைபர் சாதி’ நிறுவனருமான என். எஸ். நாப்பிணை சொல்கிறார்: “வாட்ஸ்அப் மட்டுமல்ல, எந்தச் சமூக வலைத்தளமானாலும் சரி, எந்தத் தூதுச்செயலி ஆனாலும் சரி, இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதாகக் கையொப்பமிட்டுச் சேர்ந்த பயனாளர்களின் நலனுக்கு எதிராக அந்த நிறுவனங்கள் தங்கள் கொள்கையை இஷ்டத்திற்கு மாற்ற முடியாது. அப்படி மாற்றினால், அது அராஜகமான, அனுமதிக்க முடியாத மாற்றம் என்று கூறி நீதிமன்றத்தில் போராடலாம்.”

2014ல் முகநூல் நிறுவனம் வாட்ஸ்அப்பை 19 பில்லியன் டாலர் விலைகொடுத்து வாங்கியது. இந்தத் தொழில்நுட்ப நிறுவன கைக்கொளல் என்பது வரலாற்றில் அதிமுக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

450 மில்லியன் பயனாளர்கள் என்ற பலத்தைத் தவிர பெரிதாக வருமானம் இல்லாத வாட்ஸ்அப்பை வாங்குவதற்கு இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்பட்டிருக்கிறது என்பது பலரை ஆச்சரியப்பட வைத்தது. இது தகவல் துறையில் ஏகாதிபத்தியம் எய்வதற்காக அல்லது செய்வதற்காக முகநூல் நிறுவனம் எடுத்த முயற்சி என்று பார்க்கப்பட்டது.

வாட்ஸ்அப்பின் புதிய கொள்கை முகநூல் நிறுவனத்தின் அராஜகச் செயல் என்று கருதப்படுகிறது. இந்தத் தசாப்தத்தில் அதிகமாகத் தரவிறக்கம் செய்யப்பட்ட நான்கு முக்கிய செயலிகளான முகநூல், முகநூல் தூதுவன், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் சொந்தக்காரராக முகநூல் நிறுவனம் இப்போது இருக்கிறது.

தகவல் என்னும் புதிய எண்ணெய்

இந்த 21-ஆம் நூற்றாண்டில், அதாவது இந்த மின்னணு மாறுதல் யுகத்தில், அதிமுக்கியமான சரக்கு என்பது எண்ணெய் அல்ல, தகவல்தான். அதனால்தான் ’தகவல் என்பது புதிய எண்ணெய்’ என்பது இப்போது பிரசித்திபெற்ற முழக்கமாக ஒலிக்கிறது. உலகத்தில் ஆகயுயர்ந்த நிறுவனங்களான கூகுள், முகநூல் மற்றும் அமேசான் ஆகியவை நிறைய தகவல்களைக் கையகப்படுத்துவதில் போட்டிப் போடுகின்றன என்ற நிஜத்திலிருந்து அது நிதர்சனமாகிறது.

மரபுரீதியிலான ஏகாதிபத்தியத்தை போல் அல்லாமல், தகவல் ஏகாதிபத்தியம் இதுவரை வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான விலையுயர்வையும் கொடுத்துச் சங்கடப் படுத்தியதில்லை. ஏனென்றால் மின்னணுச் சேவைகள் பெரிய அளவில் இலவசமாகவே தரப்படுகின்றன.

அதனால்தான் மின்னணுச் சேவை நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றி பயனாளர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இதன் விளைவாக, பயனாளர்களின் தகவல் அந்தரங்கமும், தகவல் பாதுகாப்பும் பலகீனப்படுத்தப் படுகின்றன. தகவல் ஏகாதிபத்திய யுத்தம் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல் என்னும் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தகவல் அந்தரங்கம்

மின்னணுச் சேவைப் பயனாளர் தன்னுடைய தகவலை மற்றவர்களிடம் எப்போது, எப்படி, எந்த அளவுக்கு இணையத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்பதைத் தகவலின் அந்தரங்கம்தான் தீர்மானிக்கிறது. இந்த அந்தரங்கத் தகவல் என்பது உங்கள் பெயராக இருக்கலாம்; வசிப்பிட முகவரியாக இருக்கலாம்; தொடர்புத் தகவலாக இருக்கலாம்; இணைய உலகத்தில் அல்லது நிஜ உலகத்தில் உங்களது நடத்தையாக இருக்கலாம்.

வாட்ஸ்அப்பின் கொள்கை மாற்றமும், தகவல் அந்தரங்கமும்

இணைய பாதுகாப்பு நிபுணரும், இன்னேஃபுயூ லாப்ஸின் சகநிறுவனருமான டருண் விக் இப்படிச் சொல்கிறார்: ”வாட்ஸ்அப்பில் ஒரு கணக்கு உருவாக்கப்படும்போது, கைப்பேசி மாடல், செயல்படும் மென்பொருள், மின்கலத்தின் நிலை, சமிக்ஞைப் பலம், காலப் பிரதேசம், ஐபி முகவரி, வாட்ஸ்அப்பின் பயன்பாடு, வாட்ஸ்அப் செயலி மூலம் பணப்பரிவர்த்தனை, அதன் விவரங்கள், ஸ்டேட்டஸ் அப்டேட், குழு விவரங்கள், தன்னறிமுகப் படங்கள், கடைசியாக மேம்படுத்தப்பட்ட தகவல் ஆகியவற்றைப் பற்றிய எல்லாத் தரவுகளையும் அந்த நிறுவனம் சேகரித்துச் சேமித்து வைத்துக் கொள்கிறது. அது மட்டுமல்ல; வாட்ஸ்அப்பில் பரிவர்த்தனையாகும் ஊடகக் கோப்புகளும் அதன் சர்வரில் சேமிக்கப்படுகின்றன.

வாட்ஸ்அப் உரையாடல்கள் பிறருக்குத் தெரியாதவண்ணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே புரிகிற மாதிரி தொழில்நுட்பச் சங்கேத மொழியில் மடைமாற்றம் செய்யப்படுகின்றன; அழைப்புகளின் பட்டியல்கள் பேணிக்காக்கப் படுவதில்லை என்றெல்லாம் வாட்ஸ்அப் நிறுவனம் சொல்கிறது. என்றாலும், ஊடகக் கோப்புகளின் பரஸ்பர சங்கேத அமைப்பில் (பயனாளர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக் கூடிய தகவல்தொடர்பு அமைப்பில்) இதைப் பற்றியெல்லாம் அந்த நிறுவனம் எதுவும் சொல்லவில்லை.

இந்தக் காலத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொருவருக்கும் முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் கணக்குகள் இருக்கின்றன. வாட்ஸ்அப்பில் சேகரிக்கப்படும் ஊடகக் கோப்புகளும், தரவுகளும், தகவல்களும் முகநூலில் பகிரப்படுகின்றன.

அதன் செயற்கை நுண்ணறிவு அமைப்பு, மேலே குறிப்பிட்ட மூன்று தகவல் மேடைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கச்சாத் தகவல்களைப் பதப்படுத்தி, ஆராய்ந்து அவற்றைப் பிரயோஜனமான, பயன்படுத்தக்கூடிய தகவல்களாக நிறமாற்றம் செய்கிறது. அவை பயனாளர்களின் ஆரோக்கியம் பற்றிய தகவல்களாக, தொழில், மற்றும் பணிசம்பந்தமன தகவல்களாக, இணையத்தைப் பயன்படுத்தும் அவர்களின் போக்குகள் பற்றிய தகவல்களாக, நிதிநிலைமை பற்றிய தகவல்களாக, வசிப்பிடம் பற்றிய தகவல்களாக இருக்கலாம்.

இவை எல்லாம் மூன்றாவது நபரிடம் பகிரப் படலாம்; பயனாளர்களுக்கு இது தெரிவதில்லை. முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் நிகழும் இந்தப் பேரளவுத் தகவல் பகிர்வு என்பது பொதுவெளியில் அந்தரங்கச் செய்திகளின் வெள்ளத்தை உருவாக்கிவிடும். இது தனிமனிதனின் அந்தரங்க ரகசியங்களை எல்லாம் அம்பலப்படுத்தும் ஆபத்தான, அபாயமான நடவடிக்கையாகிவிடும்.

சமீபத்தில் சுமார் நூறு வாட்ஸ்அப் குழுக்களின் உரையாடல் தொடர்புகளில் சில மீண்டும் கூகுளில் தலைகாட்டின. அந்தத் தொடர்புகளின் பொத்தான்களை அழுத்தினால், வாட்ஸ்அப் கணக்கு வைத்திருக்கும் எவரும் தான் அதில் ஓரங்கமாக இருப்பதைக் காணலாம்.

கடந்த வருடம் கூகுளில் அந்த மின்னணு உரையாடல் தொடர்புகள் தொடர்ந்து இருந்தபோது ஒரு பத்திரிக்கையாளர் அதை அம்பலப் படுத்தினார். பின்பு அவை நீக்கப்பட்டன.

தகவல் அந்தரங்கத்தை மீறுதல் ஆபத்தானது

அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ்அப் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்ட இந்தியா போன்ற ஒரு தேசத்தில், வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய கொள்கை பயனாளர்கள் மத்தியில் பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கி விட்டிருக்கிறது. “இந்த மின்னணு யுகத்தில் தகவல் அந்தரங்கம் என்பது தவறான ஒரு சொற்பிரயோகம். இந்த நிஜத்தை நாம் எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நிறைய இணையத்தளங்கள் வருகின்றன. நமக்குச் சேவை செய்வதற்காக, பல செயலிகள் நம் தகவல்களைத் திரட்டிச் சேமித்து வைத்துக் கொள்கின்றன. எனினும், சில சமயங்களில் இந்தச் செயலிகள் தேவைக்கு அதிகமாகவே தகவல்களைத் திரட்டிக் கொள்கின்றன.

சிலநேரங்களில் இச்செயலிகள் தகவல் அந்தரங்கப் பாதுகாப்பை உறுதிசெய்யும் முறையில் வடிவமைக்கப் படுவதில்லை. இதன் விளைவாக, சொந்தத் தகவல்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றன,” என்கிறார் இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான ராஜ்சேகர் ராஜ்கரியா.

இந்தியாவில் பள்ளிக்கூடத் தொடர்பு உறவுகளும், தெருவாசிகளின் நலச் சங்கங்களின் தொடர்பு உறவுகளும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகவே நிகழ்கின்றன.

புதிய கொள்கை மாற்றத்தால், முகநூல் நிறுவனம் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை, பள்ளிகளின் இருப்பிடம், படங்கள் ஆகிய தகவல்களைத் திரட்டி மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அது பேராபத்தை விளைவிக்கலாம்.

இந்தியாவில் ஆகப்பெரிய தகவல் கசிவு ஆதார் மின்னணுமயமாக்கலின் போது நிகழ்ந்தது என்று உலகப் பொருளாதாரச் சபை 2019-ல் வெளியிட்ட உலக அபாயங்களின் அறிக்கையில் சொல்லியிருக்கிறது.

அந்தரங்கத் தகவல்களின் துஷ்பிரயோகம்

அந்தரங்கத் தகவல்கள் பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகலாம். குற்றவாளிகள் பிறரது அந்தரங்கத் தகவல்களைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றலாம்; அல்லது இம்சிக்கலாம்.

மின்னணுத்தளத்து அச்சுறுத்தல், பாலியல் தொல்லை ஆகிய வழக்குகள் இக்காலத்தில் சர்வசாதாரணமாக பெருமளவில் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை முகநூல் வழியாகவே நிகழ்கின்றன.

உதாரணமாக, இன்ஸ்டாகிராமில் நிகழ்ந்த ‘பாயிஸ் லாக்கர் ரூம்’ என்ற கேவலமான அவச்சம்பவம், அந்தரங்கத் தகவல்கள் எப்படி சமூக ஊடகங்களில் சொற்ப விலைக்கு அற்பமாக விற்கப்படுகின்றன என்பதை நிரூபித்திருக்கிறது. இந்நிகழ்வைப் பற்றி அறியாதவர்களுக்காக பின்வரும் விவரங்கள் தரப்படுகின்றன.

டில்லியில் பதின்மவயது பையன்கள் சிலர் இஸ்டாகிராமில் அரட்டை அறை ஆரம்பித்து உரையாடிக் கொண்டிருந்தனர். போன வருடம் கரோனா காலத்து ஊரடங்கின்போது, மே மாதம் 3-ஆம் தேதி அன்று குழுவின் உறுப்பினன் ஒருவன் தகவல்களைக் கசியவிட்டான். அவற்றில் 15 இளம்பெண்களின் ஆபாசப் படங்களும் அடக்கம். அவர்களில் பெரும்பாலோனர் பதின்மவயதைச் சார்ந்தவர்கள்.

அந்தரங்கத் தகவல்கள் விளம்பரதாரர்களுக்கு அல்லது வெளிநபர்களுக்கு விற்கப்படலாம், பயனாளர்களின் சம்மதமின்றி. விளைவாக, பயனாளர்களுக்குத் தேவையில்லாத விளம்பரம் அல்லது சந்தை சார்ந்த அழைப்புகள் அல்லது செய்திகள் வந்து குவிந்து அவர்களின் மின்னணு வெளியை அளவுக்கதிகமாக நிரப்பி தொந்தரவு தரலாம். ஒரு மனிதனின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்போது, அது அவனது வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தலாம்.

வாட்ஸ்அப் தொழில் கணக்குகள் தகவல் அந்தரங்கத்தை அச்சுறுத்தலாம்

2018-ல் ‘வாட்ஸ்அப் பிஸினெஸ்’ ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலும், பிரேசிலிலும் வாட்ஸ்அப் கட்டணச் சந்தையில் நுழைந்தது. தொழில் கணக்குகளோடு சம்பந்தப்பட்ட பல மனிதர்களுக்கு உங்களின் தகவல்கள் எளிதாகக் கிடைக்கின்றன. அவை மூன்றாம் நபர்களுக்கு விற்கப்படலாம். அப்படிப் பட்ட பகிர்வுகள் அதிகமாகும்போது, உங்களது அந்தரங்கம் அம்பலமாகலாம்.

தகவல் பாதுகாப்புச் சட்டங்கள்

ஐரோப்பா யூனியன் பொதுத் தகவல் பாதுகாப்பு ஒழுங்கமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி அதன்மூலம் தன் உறுப்பினர்களுக்கான தகவல் அந்தரங்க உரிமையை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்தச் சட்டத்தை மீறும் நிறுவனங்கள் தங்கள் சம்பாத்தியத்தில் 4 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த வேண்டிவரும். பேச்சிலோ, எழுத்திலோ, மின்னணு வடிவத்திலோ பெறப்படும் அல்லது பகிரப்படும் அந்தரங்கத் தகவலை அல்லது செய்தியைப் பாதுகாக்க இந்தியாவில் தனியாகச் சட்டம் ஏதுமில்லை. ஆனால் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2000) கொண்டிருக்கும் 43-ஏ, மற்றும் 72-ஏ பிரிவுகளின்படி, அந்தரங்கத் தகவலின் தவறான வெளியீட்டிற்காக நஷ்ட ஈடு கோரும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

வாட்ஸ்அப்பிற்கான ஆகச்சிறந்த மாற்று

லைன், டெலிகிராம், வைபர், டிவிட்டர் போன்ற செய்திச் செயலிகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் சிக்னல் என்ற அந்தரங்கத் தூதுச் செயலி வாட்ஸ்அப்பின் எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

அந்தரங்கத் தகவல் பாதுகாப்பில் அது மற்றவற்றை விட ஆகச்சிறந்ததாக இருக்கிறது. நம்பகத்தன்மையில் சிக்னல் அந்தரங்கத் தூதுச் செயலி வாட்ஸ்அப்பிற்கு நல்லதொரு மாற்று.

2021 ஜனவரி முதல் இரண்டு வாரங்களில், சிக்னல் 3.3 மில்லியன் தரவிறக்கங்களைப் பதிவுசெய்து, வாட்ஸ்அப்பை விட (1.7 மில்லியன்), முகநூலை விட (2.1 மில்லியன்), இன்ஸ்டாம்கிராமை விட (2.3 மில்லியன்) முன்னணியில் நிற்கிறது.

திறந்தவெளி மூலச் சங்கேத அமைப்பையும், பயனாளர்களின் பரஸ்பர சங்கேத அமைப்பையும் அடிப்படையாகக் கொண்ட சிக்னல் உரையாடல்களின், உள்ளடக்கத்தின் ரகசியத்தன்மையைப் பேணிக் காக்கிறது. லாப நோக்கற்ற சிக்னல் பவுண்டேஷனால் நிர்வகிக்கப்படும் சிக்னல் என்னும் செயலி சுதந்திரமான வெளிப்பாட்டைப் பாதுகாக்கிறது; மேலும் உலகத் தகவல் தொடர்பையும் வழங்குகிறது, என்கிறார் மின்வெளி நிபுணர் டாக்டர் பிரசாந்த் மாலி. இலாப நோக்குடன் இயங்கும் டெலிகிராமில் ஆபத்தான பாதுகாப்புத் தவறுகள் மலிந்து கிடக்கின்றன; அதனால் பலநாடுகளில் அது தடை செய்யப் பட்டிருக்கிறது. இந்தியாவில் கூட பல இணையச் சேவை நிறுவனங்கள் அதைத் தடுத்துவிட்டன.

whatsapp privacy policy overview and explanation
மூன்று செயலிகளில் உள்ள வசதிகள்

என்ன செய்யலாம்?

இந்தியாவில் ஒரு பலமான தகவல் பாதுகாப்புச் சட்டம் வரும்வரை, நாம் பின்வரும் எச்சரிக்கைகளை மனதில் இருத்திக் கொள்வது நலம்:

ஒரு செயலியை தரவிறக்கம் செய்கையில், அதற்கு நாம் என்னவிதமான அனுமதிகளைக் கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

பலதடவை தற்காலிக கடவு வார்த்தையை (ஓடிபி) அனிச்சையாக வாசிப்பதற்கு செயலிகளுக்கு நாம் அனுமதி தருகிறோம். பின்பு அனுமதியை ரத்து செய்ய மறந்துவிடுகிறோம். இந்த விசயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

கைப்பேசியின் செட்டிங்ஸில் அடிக்கடி நுழைந்து பயன்பாட்டில் இல்லாத செயலிகளை நீக்கிவிட வேண்டும். மேலும், அந்த மாதிரியான செயலிகளுக்காக, பெர்மிஷன் செட்டிங்ஸை வெறும் தொடர்பு மற்றும் சேமிப்பு அனுமதியாக மாற்றிவிட வேண்டும். கேமிரா, மற்றும் மைக்ரோபோன் அனுமதி பெற்றிருக்கும் செயலிகள் நீண்ட நாளாக உபயோகத்தில் இல்லை என்றால், மேலே சொல்லப்பட்டிருக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது உசிதம்.

ஃபிப்ரவரி 8-க்கு பின், வாட்ஸ்அப்பில் இருப்பதா, வெளியேறுவதா

என்பது உங்கள் இஷ்டம். ஆனால் நீங்கள் தொடர்ந்து அதில் இருக்கப் போகிறீர்கள் என்றால், நிதிச் சம்பந்தமான லாகின் விவரங்கள், கடவு வார்த்தைகள், மற்றும் அதிரகசியமான தகவல்களை வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்து விடுங்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.