உலகம் முழுவதும் வாட்ஸ்அப் சமூக அளவளாவி (Chating) செயலியை 1.3 பில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் நோக்கில் தங்கள் விரல் ரேகையை வைத்தால் மட்டுமே வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும் என்ற புதிய முறையை கொண்டுவருகிறது இந்நிறுவனம். இது கை ரேகை அம்சம் உள்ள அனைத்து கைப்பேசிகளுக்கும் பொருந்தும் என்று தனது செய்திக் குறிப்பில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.19.83 சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஒரு முறை விரல் ரேகையைப் பயன்படுத்தினால் மட்டும் போதும், வாட்ஸ்அப் எவ்வளவு நேரம் திறந்திருக்க வேண்டும் உள்ளிட்ட அத்தனை வசதிகளும் அதன் அமைப்புகளில் இடம் பெற்றிருக்கும். அதற்கு, செட்டிங்> பிரைவசி> யூஸ் ஃபிங்கர் பிரின்ட் (Settings > privacy > use finger print) என அமைத்துக் கொள்ள வேண்டும்.
வாட்ஸ்அப் செயலி மூலம் செய்யப்படும் அழைப்புகள், இருபுறமும் என்கிரிப்ஷன் (Encryption) செய்யப்பட்டு, பயனர்களில் உரையாடல் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.