ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்-அப் செயலி மூலம் அவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம். இதனாலேயே, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலியாக வாட்ஸ்-அப் உள்ளது.
மேலும், வாட்ஸ்-அப் செயலியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வசதியும் உள்ளது. வாட்ஸ்-அப் செயலியில் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகள் பாதுகாப்பாகவும், எளிமையானதாகவும் இருப்பதாக அந்நிறுவனம் தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், வாட்ஸ்-அப் செயலியில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள பயனாளர்களை கவரும் விதமாக கேஷ்பேக் எனும் பரிசுத்தொகை கொடுக்கப்படும் என வாட்ஸ்-அப் தெரிவித்துள்ளது.
இந்த சேவை வாட்ஸ்-அப் பயன்படுத்தும் அனைவருக்கும் கிடைக்குமா என்று உறுதியாகவில்லை. எனினும், விரைவில் இச்சேவை அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
இது இந்தியாவில் UPI பரிவர்த்தனைக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. மேலும், நீங்கள் ஒரு நாளில் ஒரு கேஷ்பேக்கை மட்டுமே பெற முடியும் எனவும், பிற தகவல்கள் இந்த சேவை பரவலாக்கப்படும்போது முழுமையாக வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் போன்-பே, கூகுள்-பே போன்ற செயலிகள் இதுபோன்ற கேஷ்பேக்களை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாட்ஸ்-அப் பயன்படுத்த இனி இன்டர்நெட்டே வேண்டாம்