வெயில் காலத்தில் கரோனா வைரஸ் பரவாது, கோமியம் குடித்தால் கரோனா வைரஸ் பாதிப்பு நீங்கிவிடும் என வாட்ஸ் அப்பில் ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதனை சிலர் நம்புவது அரசு அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் அரசு சார்பாக மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒவ்வொரு நாளும் பட்டியலிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ட்விட்டரில் கரோனா வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் அதிகமாகப் பரப்பப்பட்டன. இதனால் ட்விட்டர் நிர்வாகம் தரப்பில், கரோனா வைரஸ் பற்றி பதிவிடப்பட்ட தவறான ட்வீட்கள் நீக்கப்பட்டுள்ளன.
சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிடப்பட்ட 2,230 ட்வீட்களை சரிபார்த்து நீக்கியுள்ளோம் என ட்விட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊதியக் குறைப்பை திரும்பப் பெற்ற இண்டிகோ நிறுவனம்