டெல்லி: ஐஓஎஸ் பயனர்கள் தங்கள் ட்வீட்களுக்கான பதில்களைக் கட்டுப்படுத்த புது அம்சத்தை ட்விட்டர் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
மே மாதம் முதல் இதற்கான சோதனையில் ட்விட்டர் நிர்வாகம் ஈடுபட்டுவந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சத்தினை ட்விட்டர் எப்போது அறிமுகம் செய்யும் என்பதற்கான எந்த தகவல்களும் இல்லை.
தேவையில்லாத சத்தங்கள் கேட்காது: ஜீப்ரானிக்ஸ் ஜீப் மாங்க் வயர்லெஸ் இயர்ஃபோன்!
இதன்மூலம் தேவையற்ற வாதங்களை தடுக்க முடியும் என்று ட்விட்டர் நம்புகிறது. பல வருடங்களாக இந்த தனியுரிமையை ட்விட்டர் நிர்வாகத்திடம் பயனர்கள் முன்வைத்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.