வீட்டிலிருந்து பணிபுரிதல் என்பது தற்போதைய கரோனா காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. இச்செயற்பாட்டிற்காக ஜூம், கூகுள் நிறுவனத்தின் கூகுள் மீட், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் என்பன அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்படியிருக்கையில் மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையை நாள்தோறும் 115 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் மாத்தில் 72 மில்லியன் பயனர்கள் நாள்தோறும் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 115 மில்லியன் எனும் மைல்கல்லினை எட்டியுள்ளதாக நிறுவனம் முன்னதாக தகவல் தெரிவித்திருந்தது.
இச்சூழலில், தொழில் முறை அல்லாத உரையாடல்களுக்கும் டீம்ஸ் தளத்தை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை, மைக்ரோசாப்ட் நிறுவனம் பயனர்களுக்கு தற்போது அளித்துள்ளது.
டீம்ஸ் தளத்தின் கைப்பேசி செயலி, கணினி மென்பொருளைக் கொண்டு 24 மணிநேரத்தில் 300 பங்கேற்பாளர்களுடன் உரையாடலாம் என்பது கூடுதல் சிறப்பு.