டெல்லி: ஷேர்சாட் செயலியானது தமிழ், மலையாளம், குஜராத்தி, மராட்டி, பஞ்சாபி, தெலுங்கு, பெங்காலி, ஒரியா, கன்னடா, அசாமி, ஹரியானி, ராஜஸ்தானி, போஜ்புரி, உருது, இந்தி ஆகிய 15 இந்திய மொழிகளில் செயல்பாட்டில் உள்ளது.
வாட்ஸ்அப் செயலி தனது ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் பீட்டா பதிப்புகளில் ஷேர்சாட் காணொலிகளை பார்க்கும் வசதியை வழங்குகிறது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 2.20.81.3, ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.197.7 பதிப்புகளில் ஷேர்சாட் காணொலிகளை இணைப்புகளின் மூலம் செயலியை விட்டு வெளியேறாமல் காணமுடியும்.
ஷேர் சாட் செயலியில், 750 கோடி முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் திட்டம்!
முன்னதாக, இதே வசதி யூடியூப், ஃபேஸ்புக் காணொலிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் இயங்குதளங்களின் புதிய வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளில் இந்த அம்சமானது சோதனை செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் ஷேர்சாட் காணொலி பகிரப்பட்டால், அதனை பார்க்க கோரும் பிளே பட்டன் இடம்பெறுகிறது. அதனை சொடுக்கியதும் காணொலி பிக்சர் இன் பிக்சர் பயன்முறை மூலம் இயங்கும்.