தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல டெக் நிறுவனமான சாம்சங் கடந்த சில ஆண்டுகளாகவே சி-லேப் என்ற பெயரில் தனது ஊழியர்கள் உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்துவருகிறது.
அதன்படி இந்தாண்டு தனது ஊழியர்கள் உருவாக்கியுள்ள ஐந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு தரவுள்ளதாக சாம்சங் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சாம்சங் தேர்ந்தெடுத்துள்ள ஐந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
- Blockbuster - ஸ்மார்ட்போன்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோக்களை எடிட் செய்ய உதவும்
- Hyler - காகிதங்களில் எழுதப்பட்ட தகவல்களை டிஜிட்டல் முறையில் மாற்றி மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு அனுப்ப உதவும்
- Haxby - வீட்டுப்பாடங்களை ஒவ்வொருவரின் கற்றல் திறனுக்கு ஏற்றபடி சிறப்பாக மேற்கொள்ள உதவும்
- SunnyFive - செயற்கை முறையில் சூரிய ஒளியை உற்பத்தி செய்யும். இதன்மூலம் வெளியே செல்லாமல் வைட்டமின் டி-ஐ ஒருவர் பெற்றுக்கொள்ளலாம்
- RootSensor - UV கதிர்கள் குறித்த தகவல்களைப் பெற உதவும்
-
From a 3D CG video editing application to a UV monitoring system, here are the 5 new startups created as part of #SamsungCLab’s in-house incubation program https://t.co/NiulQvRHeF
— Samsung Electronics (@Samsung) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">From a 3D CG video editing application to a UV monitoring system, here are the 5 new startups created as part of #SamsungCLab’s in-house incubation program https://t.co/NiulQvRHeF
— Samsung Electronics (@Samsung) May 18, 2020From a 3D CG video editing application to a UV monitoring system, here are the 5 new startups created as part of #SamsungCLab’s in-house incubation program https://t.co/NiulQvRHeF
— Samsung Electronics (@Samsung) May 18, 2020
-
2012ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனம் தொடங்கிய இந்த முயற்சியின் மூலம் பல புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இதுவரை எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 163 ஊழியர்கள், 45 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிறுவனங்கள் இதுவரை 45 மில்லியன் டாலர்கள் முதலீட்டைப் பெற்றுள்ளன. இதன் மூலம் இந்த ஸ்டார்அப் நிறுவனங்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 50 மில்லியன் டவுன்லோடை தாண்டிய கூகுள் மீட்!