கொல்கத்தா: இரண்டு தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் ஸூம் ஆப்பை பயன்படுத்திய பிறகு, மின்னஞ்சல் வழியாக ஹேக்கர்களின் அச்சுறுத்தல் வருவதாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஹேக்கர்கள் இருவரின் கணினியில் உள்ள பாதுகாக்கப்பட்ட தகவல்களை வெளியிடாமல் இருக்க, பிட்காயின் மூலம் கட்டணத் தொகையைச் செலுத்தும்படி மிரட்டியுள்ளதாக சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
'ஸூம்' செயலி பாதுகாப்பில்லை: மாநில அரசுகளை எச்சரித்த மத்திய அரசு
மேலும், தாங்கள் குறிப்பிட்ட அளவு பிட்காயினை வாங்கி கொடுக்கவில்லை என்றால், உங்களின் வேலை சம்பத்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்படும் என்று ஹேக்கர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒருவரின் கணினியில் உள்ள தகவல்களுக்கு ஹேக்கர்கள் இடப்பட்ட தடையை நீக்க இந்திய மதிப்பில் 75,000 ரூபாய்யை பிட்காயின் வாயிலாக கோரியுள்ளனர் என்று காவல் தூறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஷார்...அரசு பயன்பாட்டிற்கு ஸூம் ஆப் பாதுகாப்பற்றது - உள்துறை அமைச்சகம்
இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர், பயனர்களின் முக்கிய தகவல்களை குறிவைக்கும் ஹேக்கர்களையும், எந்த செயலி அல்லது தளத்தில் மூலம் இக்குற்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்று ஆராய்ந்து வருகின்றனர்.