ETV Bharat / lifestyle

கரோனா: பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 500 கோடி அளித்த பேடிஎம் - பிரதமரின் கரோனா நிதி

டெல்லி: கரோனாவுக்கு எதிராக போராட பிரதமரின் நிவாரண நிதிக்கு பேடிஎம் நிறுவனம் ரூ. 500 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

Paytm to contribute Rs 500 crore
Paytm to contribute Rs 500 crore
author img

By

Published : Mar 29, 2020, 5:05 PM IST

கோவிட் 19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஆயிரத்தை நெருங்குகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்களும் நிறுவனங்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டாடா சார்பில் ரூ. 1,500 கோடி நிதியுதவி அளிக்கப்படுள்ளது. அதேபோல நடிகர் அக்ஷய்குமாரும் ரூ. 25 கோடி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல ஈ-காமர்ஸ் செயலியான பேடிஎம் நிறுவனம் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 500 கோடி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், தனது பயனாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனையின்போதும் ரூ.10 வரை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என்று பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடு தற்போது சந்தித்துள்ள இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெளியேற அரசுக்கு உறுதுனையாக இருக்கும் என்றும் பேடிஎம் உறுதியளித்துள்ளது.

Paytm to contribute Rs 500 crore
பிரதமரின் நிவாரண நிதி கணக்கு

வருமான வரிச் சட்டம் (1961) கீழ் பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நிதிக்கு முழு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பணப்புழக்கத்தை உறுதி செய்ய மத்திய நிதியமைச்சர் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.