உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேபால் (PayPal), இந்தியாவில் அதன் உள்ளூர் செயல்பாட்டை நிறுத்த முடிவு செய்துள்ளது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உள்நாட்டு கட்டண (Digital Payment) சேவைகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இனி பேபால் கணக்கை பயன்படுத்த முடியும்.
-
2020 was the strongest year in @PayPal’s history. We achieved record growth in net new active accounts, volume, revenue, operating income, earnings and free cash flow. $PYPL https://t.co/6jeqf1f9Ul pic.twitter.com/WSdA7QMDzt
— PayPal News (@PayPalNews) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2020 was the strongest year in @PayPal’s history. We achieved record growth in net new active accounts, volume, revenue, operating income, earnings and free cash flow. $PYPL https://t.co/6jeqf1f9Ul pic.twitter.com/WSdA7QMDzt
— PayPal News (@PayPalNews) February 3, 20212020 was the strongest year in @PayPal’s history. We achieved record growth in net new active accounts, volume, revenue, operating income, earnings and free cash flow. $PYPL https://t.co/6jeqf1f9Ul pic.twitter.com/WSdA7QMDzt
— PayPal News (@PayPalNews) February 3, 2021
கடந்த 2017ஆம் ஆண்டு, இந்தியாவில் நிதி சேவையை தொடங்கிய பேபால், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் தனது நிறுவனத்தை தொடங்கியது. இந்த வலைத்தளத்தின் உதவியுடன், எந்தவொரு நபரும் சர்வதேச அளவில் எளிதில் பரிவர்த்தனை செய்யலாம்.
உலகளவில் சுமார் 100 மில்லியன் உறுப்பினர் கணக்குகளை பேபால் கொண்டுள்ளது. அதிகப்படியான பயனாளர்களின் உபயோகத்தால், இந்நிறுவனத்திற்கு கடந்தாண்டின் நான்காம் காலாண்டில் மட்டும் 6.12 பில்லியன் டாலர் வருவாய் பெற்று அபார வளர்ச்சியைப் பதிவு செய்தது.
இருப்பினும், வெளிநாட்டு பணப்பரிவரத்தனை மக்களிடம் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே சமயம், டிஜிட்டல் பேமெண்டில் கூகுள் பே, போன்ஃபே செயலிகள் முன்னிலையில் இருப்பதும் பேபாலின் திடீர் முடிவும் காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.