இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் தொலைத்தொடர்பு கண்காணிப்புக் குழு ஒழுக்கமற்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததாகக் கூறி ஐந்து செயலிகளின் பயன்பாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், டிண்டர், டேக்டு, ஸ்கவுட், கிரைண்டர், சே-ஹாய் ஆகிய செயலிகளின் முறையற்ற உள்ளடக்கப் பயன்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதால் அந்த செயலிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்ஜி உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை!
பாகிஸ்தானின் சட்ட விதிகளின்படி “டேட்டிங் சேவைகள்”, நேரடி இணைய சந்திப்பு ஆகிய பயன்பாடுகளை அகற்றுமாறு குறிப்பிட்ட செயலிகளின் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தன. "குறிப்பிட்ட நேரத்திற்குள் அரசின் அறிவிப்புகள் குறித்து செயலிகளின் நிர்வாகங்கள் பதிலளிக்கவில்லை என்பதால், அந்த செயலிகளின் பயன்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து சில மாதங்களாகவே பல்வேறு நாடுகளில் இணைய செயலிகள் மீது பாதுகாப்பு, தனியுரிமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.