நியூயார்க்: சிவப்பு அணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினின் அளவை கண்டறிய, திறன்பேசிகள் உதவிடும் என புது ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவமனை செல்லாமலே இதை நோயாளிகள் பயன்படுத்த முடியும் என்று ஆப்டிகா ஜெர்னல் வெளியிடப்பட்ட ஆய்வுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மென்பொருளை மட்டும் கொண்டு, எந்தவித வன்பொருள் மேம்பாடும் இன்றி நாம் இதனை செயல்படுத்த முடியும் என அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
இதனை ஸ்பெக்ட்ரல் சூப்பர் - ரெசல்யூஷன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மூலம் இதனை நிறுவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் குறைந்த தரத்திலான புகைப்படங்களைக் கொண்டும் சோதனைகளை மேற்கொள்ள முடியும்.