ஹைதராபாத் (தெலங்கானா): இந்தியாவில் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய செயலிகள் டப்ஷூட், வக்யா, ஜஸ்ட்-ஏ-செகண்ட் ஆகிய செயலிகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
டப் ஷூட்:
"தொழில்நுட்ப ரீதியாக வலுவான தளமான டப் ஷூட் நிறுவப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் வழங்கிய உரையாடல்களுக்கான டப் காணொலிகளை பயனர்கள் தங்கள் உருவத்துடன் வெளியிடமுடியும். இந்தி, ஆங்கிலத்துடன் அனைத்து இந்திய மொழிகளிலும் இதன் சேவை வழங்கப்படுகிறது. பயனர் தனியுரிமை இந்த செயலியில் உறுதி செய்யப்படுகிறது. டப் ஷூட் ஒருபோதும் பயனரின் அனுமதியின்றி எந்த உள்ளீட்டையும் செலுத்தாது என்று நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.
வக்யா:
காணொலி உரையாடல்களை மேற்கொள்ள இந்த செயலி உதவுகிறது. கரோனா ஊரடங்கு சமயத்தில், ஒரு லட்சம் பயனர்கள் இதில் தங்களைப் பதிவுசெய்து கொண்டு சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இச்செயலில் நடைபெறும் உரையாடல்கள் அனைத்தும் பாதுகாப்பானதாக அமைய புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐஓஎஸ் 14: சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஜஸ்ட்-ஏ-செகண்ட்
கைப்பேசி பயனர்களின் நகர்வுகளைக் கணித்து, அவர்களுக்குத் தேவையான பரிந்துரைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது இச்செயலி. செயற்கை நுண்ணறிவு மூலம் செறிவூட்டப்பட்ட தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளதால், வேகமாக வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை செயலி என்ற பெயரையும் இது பெற்றுள்ளது.