ETV Bharat / lifestyle

ஜியோமார்ட் செயலி: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்கள் தரவிறக்கம் செய்யலாம்! - business news in tamil

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இணைய வழி அத்தியாவசிய பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களை கவர ஜியோமார்ட் தளத்தை உருவாக்கியது. தற்போது பயனர்களின் வசதிக்காக ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதள செயலிகளை அறிமுக்கப்படுத்தியுள்ளது.

ஜியோமார்ட்
ஜியோமார்ட்
author img

By

Published : Jul 24, 2020, 4:20 PM IST

மும்பை: பயனர்களின் வசதிக்காக ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதள செயலிகளை ஜியோமார்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இணைய வர்த்தக தளமான `ஜியோமார்ட்', தற்போது இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் மாதம் இதன் சேவையானது சோதனை ஓட்டமாக நவி மும்பை, தானே, கல்யாண் ஆகிய நகரங்களில் தொடங்கப்பட்டிருந்தது.

தற்போது ஜியோமார்ட் சேவையானது அனைத்து மெட்ரோ நகரங்களிலும் கிடைக்கும். கூடுதலாக ஒவ்வொரு மாநிலத்திலும் பல முக்கிய நகரங்களிலும் இந்தச் சேவையை வழங்கிவருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 43ஆயிரத்து 584 கோடி ரூபாய் முதலீடு செய்தது. அதன்பின் வாட்ஸ்அப் இந்தச் சேவையுடன் இணைக்கப்பட்டது.

பணமழையைப் பொழியும் ஜியோ பங்குகள்... 13ஆவது நிறுவனமாக வந்த கூகுள்!

வாட்ஸ்அப் பேமன்ட் வசதி இந்தியாவில் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பின்னர் ஜியோ மார்ட்டில் பணம் செலுத்தும் முறை இன்னும் எளிமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இணையத்தில் பதிவுசெய்த பொருள்களை வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் நிறுவனங்களை மக்கள் பெரும்பாலும் நாடுகிறார்கள்.

ஜியோமார்ட் தளம்
ஜியோமார்ட் தளம்

அதனால், இதுதான் சரியான நேரம் என்று ஜியோமார்ட் வேகமாகச் செயல்பாட்டுக்கு வந்தது. முதலில் இணையதளம் மூலமாக மட்டும் ஆர்டர் செய்யும் வகையில் தொடங்கப்பட்ட சேவை இனி ஆண்ட்ராய்டு, ஐபோன் செயலி மூலமாகவும் பெறலாம்.

சிறு பல்பொருள் வணிகர்களுடன் கைகோர்க்கும் ஜியோ மார்ட்

ஆம், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களில் ஜியோமார்ட் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் ஷாப்பிங்களை இந்தச் செயலி மூலம் அனுபவியுங்கள்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இணைய சந்தை செயலிகளில் முன்னணியில் வர, பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது ஜியோமார்ட். முக்கியமானதாக இலவசமாக பொருட்களை வீடுகளில் கொண்டு சேர்க்கிறது ஜியோமார்ட்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.