வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பல நவீன வசதிகளை அறிமுகம் செய்துவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 'டார்க் மோட்' என்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது புதிய மேம்படுத்தப்பட்ட தேடுதல் (advanced search) வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளத்திலும் இந்த வசதியை பெறலாம். வாட்ஸ் அப்பில் இதுவரை இருந்த தேடுதல் முறையில் (search option) சில குறிப்பிட்ட காண்டாக்ட் மற்றும் சேட்டில் உள்ள புகைப்படங்களை மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய அட்வான்ஸ் சர்ச் ஆப்ஷன் மூலம் அனைத்து விதமான புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிஃப் புகைப்படங்கள், டாக்குமெண்டுக்கள், லிங்குகள் மற்றும் ஆடியோ ஃபைல்களையும் தேடி எடுக்க முடியும். இதனால் பயனாளர்கள் மிக எளிதாக தங்களுக்கு தேவையானவற்றை தேடிப் பெறமுடியும்.

புதிய அட்வான்ஸ் சர்ச் ஆப்ஷன் மூலம் எவ்வாறு ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை தேடி பெறலாம் என்பதை படிப்படியாக காணலாம்.
முதலில் வாட்ஸ் அப் லேட்டஸ்ட் அப்டேட் உள்ளதா? என்பதையும் இணையதள இணைப்பையும் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

1. ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியை திறந்து ஹோம் பக்கம் வந்து அதில் நியூ சர்ச் பார் என்பதை சொடுக்கவும்
2.இந்த சர்ச் பாக்ஸில் தேட வேண்டிய புகைப்படம் அல்லது வீடியோ குறித்த தகவலைப் பதிவு செய்தால், ஒரு ரிசல்ட் கிடைக்கும். அதில் உங்களுக்குத் தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த முறையில் தேடுவது மிகவும் எளிமையானது மட்டுமல்ல உடனடியாக தேவைப்படும் புகைப்படங்கள் எந்தவித சிரமமுமின்றி பெறமுடியும். அத்துடன் வீடியோ, லிங்குகள், டாக்குமெண்டுக்கள், ஆடியோ என தனித்தனி வகையாகவும் (category) நீங்கள் தேடி எடுக்கலாம். மேலும் பொதுவாக தேட வேண்டும் என்றால் எந்த வகையையும் தேர்வு செய்யாமலும் தேடலாம்.

நீங்கள் தேடும் ஃபைலின் பெயர் தெரிந்திருந்தால் அந்த பெயரை பதிவிட்டும் மிக எளிதாக தேடலாம். எடுத்துக்காட்டாக ஃபுட் பால் (கால் பந்தாட்டம்) சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்வதற்காக தேடுகிறீர்கள் என்றால் சர்ச்சில், ஃபுட் பால் என்று டைப் செய்தால் அது குறித்த அனைத்து தரவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் திரையில் தோன்றும். அதிலிருந்து தேவைப்படும் ஃபைலை தேர்வு செய்து கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பம்சம்.