சான் பிரான்சிஸ்கோ : 2019 கூகுள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கூகுள் அசிஸ்டெண்ட் டிரைவிங் பயன்முறை இறுதியாக வெளிவருவதாகத் தெரிகிறது.
சில தகவல் சாதனங்களில் கூகுள் இந்தப் பயன்பாட்டை நிறுவி வருகிறது. சோதனையோட்டமாக இது நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயன்முறை, வாகன ஓட்டிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்தப் பயன்பாட்டைக் கொண்டு குரல் ஒலி மூலம் வாகனத்தின் அம்சங்களை நாம் கட்டுப்படுத்த முடியும். மேலும், எந்த சாதனத்தையும் தொடாமல், குரல் ஒலி மூலம் கூகுளை நமக்கான வழியைக் காட்ட சொல்ல முடியும்.
‘ஹே கூகுள், லெட்ஸ் டிரைவ்’ என்று கூறினால் போதும், இந்த அம்சம் உங்களுக்கு உதவத் தயாராகிவிடும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.