ETV Bharat / lifestyle

ஐஓஎஸ் பயனர்களுக்கு குஷிதான்: விட்ஜெட்களை அறிமுகப்படுத்திய கூகுள்!

author img

By

Published : Nov 20, 2020, 4:31 PM IST

கூகுள் நிறுவனம் ஐஓஎஸ் 14 சாதனங்களுக்கான புதிய ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் ஃபிட் விட்ஜெட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜி
ஜி

ஐஓஎஸ் 14 இன் புதிய அம்சமான ஹோம் ஸ்கிரீன் விட்ஜெட்களுக்காக, கூகுள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் சிலவற்றைப் புதுப்பித்துள்ளது. குறிப்பாக ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் ஃபிட், கூகுள் காலண்டர், கூகுள் குரோம் ஆகியவற்றிற்கான புதிய விட்ஜெட்களை வெளியிடுவதாக நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிமெயில் விட்ஜெட்: இதன்மூலம் உங்களின் மெயில் இன்பாக்ஸில் மெசேஜ் தேடுவது மட்டுமன்றி புதிய மெயில் அனுப்பும் தளத்திற்கு எளிதாகச் சென்றிட முடியும்.

கூகுள் டிரைவ் விட்ஜெட்: இதன்மூலம் உங்களின் பழைய புகைப்படங்கள், கோப்புகள் எதை வேண்டுமானாலும் டிஸ்பிளே திரையில் எளிதாக கண்டறிய முடியும். செயலிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இனி கிடையாது.

கூகுள் ஃபிட்: உங்களின் இதய துடிப்பு, ஓட்டம் அல்லது நடைபயிற்சி செய்யும் நேரம் போன்றவற்றை முகப்புத் திரையில் கணக்கிட இந்த விட்ஜெட் உதவியாக இருக்கும்.

காலண்டர் விட்ஜெட்: டிஸ்பிளேயில் உங்கள் சந்திப்பின் விவரங்கள் அல்லது ஏதேனும் முக்கிய நிகழ்வுக்குச் செல்வது போன்ற நினைவூட்டலை எளிதாகப் பார்த்துக் கொள்ளலாம்.

குரோம் விட்ஜெட்: புதிய டாப் ஓப்பன், சீக்ரெட் டாப், வாய்ஸ் செர்ச் வசதி, QR ஸ்கேனிங் வசதி போன்ற பல்வேறு வசதிகளை இந்த சிறிய விட்ஜெட் கொண்டுள்ளது.

முன்னதாக, டிஸ்பிளேயில் பயனுள்ள தகவல்களை வைக்கவும் அல்லது பொதுவான பணிகளுக்கு விரைவான அணுகலை வழங்குவதற்குத் தேவையான கூகுள் தேடல் பயன்பாட்டிற்கான விட்ஜெட்டை செப்டம்பர் மாதத்தில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.