வாட்ஸ்ஆப் செயலியில் ஃபிங்கர்பிரிண்ட் வசதியை பாதுகாப்புக்காக சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. சில வாரங்களுக்கு முன் இந்த பாதுகாப்பு அம்சம், ஆப்பிள் மொபைல்ஃபோன்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டிராய்ட் சாதனங்களுக்கு இந்த அப்டேட் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் வாட்ஸ்ஆப்பின் 2.19.221 என்ற பீட்டா பதிப்பில் இந்த ஃபிங்கர்பிரிண்ட் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனாளர்கள் 'Setting'இல் உள்ள 'Privacy' என்ற இடத்தில் இந்த பாதுகாப்பு அம்சத்தை உபயோகிக்கலாம்.
அதன்படி ஒரு நிமிடமோ அல்லது 30 நிமிடமோ வாட்ஸ்ஆப்-இல் எந்த ஒரு செயல்பாடுகளும் இல்லை என்றால் தானாக லாக் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.