ஃபேஸ்புக் நிறுவனம், அதிகளவிலான பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் கணக்குகளில் இடப்படும் பதிவுகளை இருப்பிடத்துடன் பகிரப்படும் என்று தெரிவித்துள்ளது. பயனர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தவே இம்முயற்சி என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இதன்மூலம் பகிரப்படும் தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், இதனை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் அமெரிக்க பயனர்களுக்கு மட்டும் செயல்படுத்தியுள்ளது.
மக்களுக்கு எது உண்மைத் தகவல்கள் என்பதை தெளிவுபடுத்தவே இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இந்த மாற்றங்களைக் கொண்டுவரவிருப்பதாக அந்நிறுவனம் பதிவிட்டுள்ளது.