உலகளவில் பிரபலமான ஃபேஸ்புக் மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்ப நிறுவனமாக 2.80 பில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கிறது. சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 32 கோடி ஃபேஸ்புக் பயனர்கள் உள்ளனர்.
இரண்டாவதாக அமெரிக்காவில் 19 கோடி பயனர்கள் உள்ளனர். பயனர்களைக் கவர்வதற்காக அவ்வப்போது புதிய வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்திவருகிறது.
அந்த வகையில், ஃபேஸ்புக் பக்கத்தின் நியூஸ் ஃபீடில் நண்பர்கள் பதிவை முதலில் பார்ப்பதற்காக 'பேவரிட்ஸ்' (Favorites) அம்சம் அறிமுகமாகியுள்ளது.
இந்தப் பேவரிட்ஸில் 30 நண்பர்கள் அல்லது பிடித்த வலைப்பக்கங்களைத் தேர்வுசெய்து வைத்துக்கொள்ளலாம். இதனால், உங்களின் நண்பர்களின் பதிவு உங்களின் கண்களை விட்டு ஒருபோதும் மிஸ் ஆகாது.
நீங்கள் கமெண்ட் செய்யமுடியாமல் போயிடுச்சே என்ற வருத்தமும் உங்களுக்கு ஏற்படாது. தற்போது, இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் ஐஓஎஸ் பயனாளர்களுக்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
![facebook](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11236425_facebook2.jpg)
இதுமட்டுமின்றி, உங்களின் பதிவுகளில் யார் கமெண்ட் செய்யலாம் என்ற வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நபர்கள், நண்பர்கள் மட்டும் யார் வேண்டுமானாலும் கமெண்ட் செய்யலாம் ஆகிய மூன்று தேர்வுகளைக் கொடுத்துள்ளனர்.
![facebook](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11236425_facebook.jpg)
இதையும் படிங்க: வந்தாச்சு டுயட் வசதி... ரீல்ஸில் அறிமுகமான ரிமிக்ஸ்