உலகெங்கும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
அதேபோல சமூக வலைதளங்கள் சார்பிலும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் இதயத்தைக் கட்டித்தழுவும் புதிய எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "இந்த நெருக்கடியான சூழலில் மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் ஃபேஸ்புக், மெசஞ்சரில் புதிய Care எமோஜி வெளியிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Today, alongside Facebook, we are rolling out a new reaction to express caring and compassion. https://t.co/2FTJrX6jV4
— Messenger (@messenger) April 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today, alongside Facebook, we are rolling out a new reaction to express caring and compassion. https://t.co/2FTJrX6jV4
— Messenger (@messenger) April 17, 2020Today, alongside Facebook, we are rolling out a new reaction to express caring and compassion. https://t.co/2FTJrX6jV4
— Messenger (@messenger) April 17, 2020
ஏழாவது எமோஜியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இது இதயத்தைக் கட்டித் தழுவும் வகையில் உள்ளது. அதேபோல மெசஞ்சரில் துடிக்கும் இதயத்தைப் போன்ற ஒரு எமோஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் தொடங்கப்பட்டபோது லைக் எமோஜி மட்டும் அதிலிருந்தது. பின் பயனாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று ஹா ஹா, லவ், வாவ், ஆங்கிரி, சேட் (Sad) உள்ளிட்ட எமோஜிகள் சேர்க்கப்பட்டன.
இதையும் படிங்க: எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யுமா ஐகூவின் அடுத்த ஸ்மார்ட்போன்!