டெல்லி: ஆண்ட்ராய்டு நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு 11 பதிப்பு, சாம்சங் ஃபிளிப், சாம்சங் 10 நோட் வகை கைப்பேசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சாம்சங் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட இயங்குதளமான ஒன் யூஐ - 3 நிறுவப்பட்டுள்ளது. இந்தப் புதிய பதிப்புகளின் மூலம் மேம்படுத்தப்பட்ட செயலிகளைப் பயனர்கள் அனுபவிக்க முடியும்.
இலகுவாக அமைப்புகளை அணுகும் வசதி, கேமரா திறன், பக்குகள் நீக்கம் ஆகியவை பயனர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தைக் கொடுக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.