கரோனா நோய்த் கிருமித் தொற்று குறித்து 10ஆயிரத்துக்கும் அதிகமான கேள்விகளுக்கு அமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் செயலியான அலெக்ஸாவிடம் பதில் கேட்டுப் பெற முடியும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நோய்க் கிருமித் தொற்று குறித்து துல்லிய தகவல்களை அளிக்கும் திறன் அலெக்ஸாவிடம் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அலெக்ஸாவுடன் வினாடி வினா விளையாட்டு, எண் யூக விளையாட்டு, உண்மை அல்லது பொய் விளையாட்டு என்று சொன்னால், அதற்கான விளையாட்டை பயனர்களுக்காக வழங்கும்.
மேலும், ஊரடங்கின் போது செய்யவேண்டிய யோகாசனம், வீட்டு விளையாட்டு, உணவு தயாரிப்பு முறைகளையும் எந்த சலிப்பும் இல்லாமல் நமக்கு அளிக்கும் என்ற உறுதிமொழியை அமேசான் நிறுவனம் அளித்துள்ளது.