ETV Bharat / lifestyle

திராவிட பிதாமகன் பண்டிதர் அயோத்தி தாசர்!

author img

By

Published : May 5, 2019, 7:46 PM IST

Updated : May 5, 2019, 8:52 PM IST

பகுத்தறிவு, சீர்திருத்தம், சமத்துவம், மொழியுணர்வு, இன உணர்வு போன்ற கொள்கைகள் கொண்ட பண்டிதர் அயோத்தி தாசர், நவீன இந்தியாவில் மாபெரும் அறிஞருள் ஒருவர் என்றால் அது மிகையாகாது.

அயோத்தி தாசர்

கல்வியாளர், சமூக மதச் சீர்திருத்தவாதி, அரசியல் சிந்தனையாளர், மருத்துவர், படைப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முக முகங்களை கொண்டவர் பண்டிதர் அயோத்தி தாசர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் வெடித்தெழுந்தவரின் 105வது நினைவு தினம் இன்று. சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு தன் வாழ்நாளையே ஒப்படைத்துக் கொண்ட மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த தினத்தில்தான் மேதை அயோத்தி தாசரும் இறந்திருக்கிறார்.

இந்தியாவில் மட்டும்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி மறுக்கப்படுகிறது. பலதரப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவில் வர்ணாஸ்ரமத்தின் படி பின்பற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வலையை நெறிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பண்டிதர் அயோத்திதாசர் கேள்வி எழுப்பினார். ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்கும், விடுதலைக்கும் வெளியில் இருந்து எவரும் உதவிட முடியாது. நமக்கான வலிமையையும், சமகாலத்தில் இருந்தே, நமக்கான வரலாற்றை அணி திரட்டி எழுவது மூலம்தான் சாதித்துக்கொள்ள முடியும் என அறை கூவல் விடுத்தார் அயோத்தி தாசர்.

அப்போதைய காங்கிரஸ் கட்சியை இந்து காங்கிரஸ் என்று துணிந்து சாடி பேசினார். திராவிடக் கருத்தியலின், திராவிட அரசியலின் முன்னோடி பண்டிதமணி க. அயோத்தி தாசர். அவரது நினைவு நாளான இன்று இவரைப்பற்றி சிந்திப்பதும் பேசுவதும் மிகச்சிறந்ததாக அமையும். அயோத்தி தாசரின் பிறப்பு இறப்புகளை தெரிந்துகொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதைவிட நமது தமிழ்ச் சமூகத்திற்கு அவர் விதைத்து சென்ற சமூக நீதிப்போராட்டங்களை பற்றி தெரிந்துகொள்வோம். தமிழக வரலாற்றையே மாற்றிப்போடும் தத்துவங்களுக்கு முதல் வாசலை திறந்துவிட்டவர் அயோத்தி தாசர். அண்டம், பிண்டம் என இரண்டொன்றும் ஏதுமில்லை. ஆதி சங்கரர் நிறுவிய அத்வைத தத்துவ நூல்களை படித்ததால் 1870ஆம் ஆண்டு தனது 25வது வயதில் அத்வைத அமைப்பை நிறுவி அதன் மூலம் பழங்குடி மக்களை திரட்ட எண்ணினார். பழங்குடிகளான தமிழர்கள் தாழ்த்தப்படுவதை, புறக்கணிக்கப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் துடித்தார் அயோத்தி தாசர். அத்வைத அமைப்பில் சனாதன போக்கு இருப்பதால் பின்னாளில் அதனை கைவிட்டார்.

அயோத்தி தாசர்
அயோத்தி தாசர்

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெவ்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும், மக்கள் தமிழராக இருந்தால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்பதை உணர்ந்த அயோத்தி தாசர் 1891 ஆம் ஆண்டு 'சாதியற்ற திராவிட மகாஜன சபையை' உருவாக்கினார். இலக்கியம், சமூக, சமய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமூகம் படைக்கும் பணியில் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்ட, இவர் தலித் மக்களின் விடுதலைக்காக பெரிதும் போராடினார். தனது வாழ்நாள் முழுவதும் சனாதனத்தை எதிர்த்து போராடிய அயோத்தி தாசரை தந்தை பெரியார் தனது முன்னோடி என அறிவித்துக்கொண்ட வரலாற்று பிண்ணனியும் உண்டு.

அயோத்தி தாசர் வாழ்ந்த காலகட்டத்தில், தான் பார்த்த அனுபவித்த சாதிக்கொடுமைகளை பகுத்தறிவோடு ஒரு கோட்பாடு தான் ஒரு சமூகத்தை அடிமைப்படுத்துகிறது. நம்மை சுரண்டுகிறது நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்ற புரிதல் கொண்டு போராடியுள்ளார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
05.05.2019

*மதுரையில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்*

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் மதுரையில் 11ஆயிரம் மாணவர்கள் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
இதற்காக 35 தேர்வு மையங்கள் மதுரையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு மாணவிகளுக்கு வழிகாட்டுதலுக்காக மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் பல உதவி மையங்கள் மாட்டுத்தாவணி, பெரியார், அண்ணா பேருந்து நிலையங்கள் போன்றவற்றிலும், ரயில் நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது, ரயில் நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் காரணமாக அங்கிருந்த தேர் நீட் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டு ,
3174 மாணவ-மாணவிகளுக்கு புதிய தேர்வு மையமாக மதுரை விரகனூர், நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது அங்கு தேர்வு எழுதுகின்றனர்.

Visual send in ftp
Visual name : TN_MDU_01_05_NEET EXAM NEWZ_TN10003

Last Updated : May 5, 2019, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.