காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயில் ரத்னங்கி சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலக பிரசித்திப் பெற்ற அத்தி வரதர் கோயிலான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தையொட்டி தாத தேசிக சாத்துமுறை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை அணிவிக்கப்படும் ரத்ன அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அத்திகிரி மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ரத்ன அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தேவித் தாயார் உடன் எழுந்தருளிய வரதராஜப் பெருமாளை ஏராளமான பக்தர்கள் திரளாக கூடி நின்று தரிசனம் செய்து வழிபட்டனர்.