தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அக்கினிமாடசாமி கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த பிச்சுமணி மகன் சொரிமுத்து (20). இவர் ஆலங்குளம் - தென்காசி சாலையில் உள்ள தனியார் ஆட்டோமொபைல்ஸ் கடையில் பணியாற்றி வந்தார். தென்காசியில் நேற்று (நவ.2) இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது.
இதனிடையே இரு சக்கர வாகனம் ஒன்றை நீரால் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்த சொரிமுத்து, தனி அறையில் உள்ள மின்மோட்டாரை நிறுத்தச் சென்றார். அப்போது இடி இடித்ததில் தடுமாறியவர் மீது மின்சாரம் தாக்கியது. அதில் சொரிமுத்து கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் மயங்கி கிடந்தவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ’முட்டாள், தொலைத்து விடுவேன்’ : மருத்துவப் பணிகள் இணை இயக்குநரை மிரட்டிய மருத்துவர் - வைரல் ஆடியோ!