மதுரவாயலில் திமுகவைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமாக காலி இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று கிடந்தது. தலையில் கல்லைப் போட்டு சிதைக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த உடல் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுரவாயல் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், உயிரிழந்த நபர் குறித்து அவரது பையில் இருந்த புகைப்படத்தை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் மதுரவாயல் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முனுசாமி (35) என்பது தெரியவந்தது. மேலும் அவரை கொலை செய்தது யார், எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நடுவானில் மாரடைப்பு: உயிரிழந்த விமான பயணி