விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில்வே பீடர் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில், முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு அங்குச் சென்றார்.
அப்போது அவருக்கு பணம் எடுக்க உதவி செய்வது போல் இளைஞர் ஒருவர், அவரின் ஏடிஎம் அட்டையை வாங்கி பணம் எடுத்துக் கொடுத்தார். சில தினங்களுக்கு பிறகு பெண்ணின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியைப் பார்த்தபோது, தொடர்ச்சியாக ரூ. 1.40 ஆயிரம் வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து ராஜபாளையும் காவல்நிலையத்தில் மகேஸ்வரி புகாரளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிவகாசி சாடியாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (36) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திருடிய பணத்தில் 90 ஆயிரம் ரூபாயை கடன் அளித்ததாகவும், 40 ஆயிரம் ரூபாய்க்கு இருசக்கர வாகனம் வாங்கியதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க;பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்...! இருவர் கைது