ETV Bharat / jagte-raho

கோழி திருடியதாக கூறி அண்ணனை கொலை செய்த தம்பி! - குற்ற செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் வி. கல்லுப்பட்டியில் முன்விரோதம் காரணத்தால் கோழி திருடியதாக கூறி சொந்த அண்ணனை கொலை செய்த தம்பியை காவல் துறையினர் கைது செய்தனர்.

murder_brother
murder_brother
author img

By

Published : Sep 30, 2020, 10:15 AM IST

திண்டுக்கல்: தனது கோழியை திருடியதாக கூறி சொந்த அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாத்துரை காவல் எல்லைக்குள்பட்ட V. கல்லுப்பட்டியில் வசித்துவருபவர் முனியாண்டி(28). இவருக்கு 17 வயது கொண்ட உடன் பிறந்த சகோதரர் ஒருவர் உள்ளார். சகோதரர்கள் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்ணன் முனியாண்டி தனது வீட்டில் இருந்த சேவல் கோழியை திருடிவிட்டதாக கூறி அவரது தம்பி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன் முனியாண்டியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் குடல் சரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக முனியாண்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் காயம் பலமாக இருந்ததால் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மதுரை செல்லும் வழியிலேயே முனியாண்டி இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து அம்பாத்துரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 17 வயது தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மருந்துகள் சப்ளை - 8 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.