ETV Bharat / jagte-raho

வரதட்சணைக் கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை! - பெண் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி: வரதட்சணைக் கொடுமை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

women-suicide-for-dowry-in-kallakurichi
women-suicide-for-dowry-in-kallakurichi
author img

By

Published : Jul 16, 2020, 8:16 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபனா(27). இவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் 2018இல் திருமணம் நடைபெற்றது. எருமனூரில் வசித்து வரும் இவர்களுக்கு விஷோத் என்ற ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் தொடர்ந்து ஷோபனாவை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷோபனா இன்று எருமனூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஷோபனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் முன் புடவையை கழுத்தில் மாட்டிக் கொண்டு கண்ணீர் மல்க தனக்கு நடந்த கொடுமைகளை விவரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் தன் மாமனார், மாமியார் கொடுமைப்படுத்தியதையும், தன் குழந்தையை நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்றும், தன் சாவிற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று அழுதபடி கூறியுள்ளார். மேலும் என் தந்தையை அடக்கம் செய்த இடத்திலேயே தன்னையும் அடக்கம் செய்யுமாறு கூறிவிட்டு தற்கொலை கொண்டுள்ளார்.

வரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பட்டாக்கத்தியால் கேக் வெட்டியவர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.