ETV Bharat / jagte-raho

புதிய வீட்டில் குடிபெயர்ந்த பெண் தீக்குளிப்பு: கணவரிடம் விசாரணை!

கோயம்புத்தூர்: புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த முதல் நாளிலேயே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதால் கணவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

புதிய வீட்டில் குடிபெயர்ந்த பெண் தற்கொலை: கணவரிடம் காவல் துறை விசாரணை!
Husband and wife misunderstanding
author img

By

Published : Jul 28, 2020, 8:53 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா(27). இவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார்.

பின்னர், கணவருடன் ஏறப்ட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து திருநெல்வேலியில் உள்ள அவரது தாய் தந்தை குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

சிறிது காலத்தில் சதீஷ் என்ற வேறு ஒருவரை மறு திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் கோவை போத்தனூரில் வசித்து வந்தார். இந்நிலையில் ரங்கசாமி கவுண்டர் என்னும் பகுதியில் நேற்று புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.

புது வீட்டில் குடிபெயர்ந்த நிலையில் சுலோச்சனாவின் இரண்டாவது கணவர் குடித்துவிட்டு அவரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் நேற்றிரவு சுலோச்சனா தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு எடுத்து தன் மீது தீ வைத்துள்ளார். அவரைக் காப்பாற்ற சதீஷ் , இரு குழந்தைகளும் போராடிய நிலையில் சுலோச்சனா பரிதாபமாக வீட்டிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.