விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ரேஷன் கடை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செண்பகவள்ளி (45), தினமும் அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்து இருந்து சிவாகாசி செல்லும் மெயின் ரோட்டில் தனது தோழிகள் 5 பேருடன் நடைப்பயிற்சி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதையடுத்து இன்று அதிகாலை (பிப்.4) வழக்கம்போல் நடைப்பயிற்சி சென்றார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் செண்பகவள்ளியை வழிமறித்து, அவர் கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆய்வாளர் பாலாஜி, துணை ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று வழிப்பறி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயம்பேட்டில் லாரி முன் பாய்ந்து முதியவர் தற்கொலை!