ETV Bharat / jagte-raho

மதுபோதையில் தகராறு: ஒருவர் உயிரிழப்பு - Thenkasi latest News

தென்காசி: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி கம்பால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

wage-laborer-killed-in-drunken-dispute
wage-laborer-killed-in-drunken-dispute
author img

By

Published : Jun 2, 2020, 6:48 PM IST

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள இந்திரா காலணியைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் வைரவன் (45). இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு பூல்கனி (40) என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த பெரியமுனியாண்டி மகன் முருகனுடன் (38) வைரவனுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வைரவன் உள்ளிட்ட சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த முருகனுக்கும் வைரவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் முருகன் அருகில் இருந்த கம்பால் வைரவனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வைரவனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று வைரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, புளியங்குடி காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் இதுகுறித்து கொலை வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.