உஸ்ரோவலி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு வாகே. இவருக்கும் இவரது உறவினரான கிசோர் வாகேவுக்கும் (26) தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, கிசோர் கீழே கிடந்த கல்லை எடுத்து பாலுவின் தலையில் அடித்துள்ளார். தொடர்ந்து கல்லால் அடித்ததால் நிலை குலைந்து போன பாலு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கிசோரைக் கைது செய்தனர். கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அவரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மதுபோதையில் மகள் மீது பாலியல் வன்முறை: தந்தை கைது