ஹரியானாவில் 7 குற்ற வழக்குகளில் தேடப்படும் கேங்ஸ்டர் விக்ரம் குஜ்ஜார், ராஜஸ்தான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பெஹ்ரோர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று உயர் ரக துப்பாக்கிளைக் கொண்டு பெஹ்ரோர் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தி விக்ரம் குஜ்ஜாரை மீட்டுச் சென்றது. மூத்த காவல் அலுவர்கள் இருக்கும்போதே நிகழ்ந்த இந்தச் சம்பவம், ராஜஸ்தான் காவல் துறைக்கு அவப்பெயரை பெற்றுத்தந்தது.
ராஜஸ்தான் காவல் துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியும் விக்ரம் குஜ்ஜார் சிக்கவில்லை. இந்நிலையில், விக்ரம் குஜ்ஜார் தப்பிச் செல்ல உதவியவர்கள் என 13 நபர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களை பெஹ்ரோர் பள்ளி மைதானத்திலிருந்து காவல் நிலையம்வரை உள்ளாடைகளுடன் அழைத்து வந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
150-க்கும் அதிகமான காவல் துறையினர் சூழ இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து மனித உரிமைகள் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குற்றவாளியைப் பிடிக்க முடியாத ஆத்திரத்தில் காவல் துறையினர் இவ்வாறு நடந்துகொள்வதாக சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: போலீசுக்கு டிமிக்கி கொடுத்து குற்றவாளி... 22 ஆண்டுகள் கழித்து கைது!