ETV Bharat / jagte-raho

வேன் மோதி தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு - Accident in kuntrathur

காஞ்சிபுரம்: குன்றத்தூரில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்
author img

By

Published : Sep 24, 2019, 11:31 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மணிகண்டன் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்(38). இவர் அதேப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகத்தில் வந்த வேன் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்

இந்த விபத்தில் ஜெகதிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் இறந்த ஜெகதீஷூக்கு முதலுதவி அளிக்க சரியான நேரத்தில் காவல்துறையினர் வரவில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:குன்றத்தூரில் வேன் மோதி தனியார் பள்ளி பஸ் டிரைவர் பலி.

Body:குன்றத்தூர், மணிகண்டன் நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ்(38), அங்குள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இன்று காலை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டிற்கு மொபெட்டில் சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர் - முருகன் கோயில் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த வேன், மொபட் மீது மோதியதில் ஜெகதீஸ் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து விபத்து ஏற்படுத்திவிட்டு வேன் டிரைவர் நிற்காமல் சென்றுவிட்டார். இதில் ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.Conclusion:இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த ஜெகதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த வாகனத்தை தேடி வருகின்றனர். விபத்தில் ஜெகதீஸ் இறந்து நீண்ட நேரமாகியும் போலீசார் வரவில்லை என்றும் முதலுதவி செய்யப்படவில்லை என இறந்தபோன ஜெகதீஸ் குடும்பத்தினர் அங்கு திரண்டு போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் சரியாக பதிவாகவில்லை அதன் அருகே மரச்செடிகள் வளர்ந்து மறைத்தபடி இருந்தது. எனவே கண்காணிப்பு கேமரா அருகே மறைத்தபடி இருக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.