உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்தோய் மாவட்டம் மஜிலா எல்லைக்குட்பட்ட திகியா கிராமத்தில் வசித்துவரும் 17 வயது சிறுமியின் குடும்பத்திற்கும், அண்டை வீட்டாருக்கும் இடையே முன்பகை இருந்துவந்துள்ளது. இதனால் இரு வீட்டிற்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று (அக். 24) முன்பகை முற்றவே இரு வீட்டாரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கியுள்ளனர். இதில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த அண்டை வீட்டைச் சேர்ந்தவர் சிறுமியை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதில் சிறுமியின் கைகள் சிதைந்துள்ளன.
இதையடுத்து சிறுமியை குடும்பத்தாரும், அக்கம் பக்கத்தினரும் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு தீவிர சிகிச்சைக்காக ஹார்தோயில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மஜிலா காவல் துறையினர், அண்டை வீட்டார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க...திடீரென மாயமான சிறுவன் - தேடிவரும் தீயணைப்பு மீட்பு குழு!