மூன்று மாதங்களாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், பெல் தொழிற்சாலை, துவாக்குடி மற்றும் மத்திய பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையங்களில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டுப் போனது. இது குறித்து அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வாகனத் திருடனை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரித்ததில் அந்த நபர் தஞ்சை மாவட்டம் வீரசிங்கம்பேட்டை நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் மகன் அகஸ்டின் என்பதும் இந்த தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பாட்டி உன் காசு வேண்டாம் பாசம் போதும் - நெகிழ வைத்த பிரேசில் திருடன்
மேம்பட்ட விசாரணையில் திருடப்பட்ட வாகனங்கள் அனைத்துமே பழைய இரும்பு வியாபாரிகளிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. அந்த பணத்தை இரண்டு மனைவிகளுக்கு கொடுத்து, தானும் செலவு செய்து உல்லாசமாக வாழ்ந்துள்ளார். 2009ஆம் ஆண்டு முதல் அகஸ்டின் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இவரிடமிருந்து தற்போது 30 இருச்சக்கர வாகனங்களும், இரண்டு நான்குச் சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.