ETV Bharat / jagte-raho

பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்! - Chennai latest news

சென்னை: வீட்டின் வெளியே நிறுத்திவைக்கபட்டிருந்த இருசக்கர வாகனத்தை பட்டப்பகலில் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

two-wheeler Theft
two-wheeler Theft
author img

By

Published : Dec 11, 2020, 6:19 PM IST

சென்னை மேற்கு தாம்பரம், அம்பாள் நகர் 4ஆவது தெருவை சேர்ந்தவர் தசரதன் (52). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டு வாசலில் அவரது இருசக்கர வாகனத்தை வழக்கம்போல் நிறுத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று (டிச.11) காலை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவரது இருசக்கர வாகத்தின் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர். இதனை அறியாத தசரதன் வெளியே செல்வதற்காக வந்து பார்த்தபோது, அவரது வாகனம் காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பட்டபகலில் இருசக்கர வாகனம் திருட்டு

இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் ஒரு வாகனத்தில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வருவதும், பின்னர் வாகனத்தை திருடிச் செல்வதும் பதிவாகி இருந்தது.

இச்சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டு... தீட்டை கழிக்கும் விதத்தில் களமிறங்கிய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.