ETV Bharat / jagte-raho

உன்னை வாழ விடமாட்டேன்: அதிமுக நிர்வாகிக்கு மிரட்டல் கடிதம் - latha chandran petition

கன்னியாகுமரி: ஆளூர் பேரூராட்சி முன்னாள் தலைவிக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த அமமுக பிரமுகரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

admk
admk
author img

By

Published : Oct 13, 2020, 2:52 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்லின் பிரேமலதா என்ற லதா சந்திரன். முன்னாள் அளூர் பேரூராட்சி தலைவியான இவர், தற்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனராக பதவி வகித்துவருகிறார்.

சில நாள்களுக்கு முன்பு இவரது வீட்டு முகவரிக்கு ராகவன் என்பவர் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார். அதில், "லதா சந்திரனை பற்றி அவதூறாகவும், குடும்பத்துடன் லாரி வைத்து கொலை செய்வதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அரசியலை விட்டு ஓடி விடு உன்னை கட்சியிலிருந்து கெட்ட பெயருடன் வெளியேற வைப்பேன். உன்னை வாழ விடமாட்டேன்" என எழுதியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லதா சந்திரன் உடனடியாக இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் மணிக்கட்டி பொட்டல் பகுதியில் உள்ள ராகவன் வீட்டிற்கு சென்றபோது, ராகவன் தலைமறைவானார்.

காவல் துறையின் தொடர் விசாரணையில் ராகவன் அமமுகவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294(b), 506/2 கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த இரணியல் காவல் துறையினர் தலைமறைவான ராகவனை தேடி வருகின்றனர்.

அதிமுக நிர்வாகிக்கு மிரட்டல் கடிதம்

கொலை மிரட்டலுக்கு உள்ளான லதா சந்திரன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் முதல் பெண் பேரூர் செயலாளராக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'மூளை வளர்ச்சியே இல்லாத கட்சி காங்கிரஸ் ' - குஷ்பூ சாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.