திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ராஜம்மாள் நகரில் வசித்து வருபவர் பாலகங்காதரர். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவாசிக்கு சென்றார்.
பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகை, மூன்று கிலோ வெள்ளிப் பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் வந்த மீஞ்சூர் போலீசார், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.