தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள ஆளில்லாத வீட்டில் குதித்து நேற்றிரவு (ஜன. 11) இளைஞர்கள் சிலர் திருட முயற்சித்துள்ளனர். அவ்வேளையில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் திருட்டுக்கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதில் ஒருவர் தப்பியோடிவிட்டார்.
மற்ற மூன்று நபர்கள் காவல் துறையினரால் பிடிபட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த அரசாங்கம், ஈஸ்வரன், செல்வம் ஆகிய மூன்று இளைஞர்கள் முதல் முறையாக திருட்டில் ஈடுபட்டு கையும், களவுமாக மாட்டிக் கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் மூன்று இளைஞர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய ஒருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க...தெலங்கானாவில் பள்ளிகளைத் திறக்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவு!