ETV Bharat / jagte-raho

பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் - நீதிபதி அதிரடி உத்தரவு! - Theni Mahla Court Judgement To Child Sexual Harassment Case

தேனி: பாலியல் வன்புணர்வுக்கு ஆளான ஐந்து வயது சிறுமியின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

sexual harassment case in Theni
author img

By

Published : Oct 16, 2019, 7:50 AM IST

Updated : Oct 16, 2019, 7:58 AM IST

தேனி மாவட்டம் பாரஸ்ட் சாலையைச் சேர்ந்தவர் செல்லத்துரை (70). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் தனது பேத்தியுடன் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையடுத்து, செல்லத்துரை மீது தேனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி கீதா பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணத் தொகையை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம்

இதில், ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் குழந்தையின் படிப்பு செலவிற்காகவும், ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் குழந்தையின் குடும்பத்திற்கு வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தொகையை லட்சுமிபுரம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவனின் பிறப்புறுப்பைத் துண்டித்துக் கொன்ற மனைவி!

Intro:          தேனியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5வயது சிறுமியின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் ரூ.7லட்சம் நிவாரணம் வழங்க தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவு.
Body:         தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்தவர் செல்லத்துரை(70). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் தனது பேத்தியுடன் விளையாடிக் கொண்டிருந்த 5வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தேனி நகர் காவல்துறையினர் காமக்கொடூரணை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
         இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி கீதா பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.7லட்சம் நிவாரணத் தொகையை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதில், ரூ.1,40,000; குழந்தையின் படிப்பு செலவிற்காகவும், ரூ.5,60,000 குழந்தையின் குடும்பத்திற்கு வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Conclusion: இந்த தொகையை லெட்சுமிபுரம் பாரத ஸ்டேட் வங்கிக்கிளையில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Last Updated : Oct 16, 2019, 7:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.