நாகப்பட்டினம்: குத்தாலம் அருகே சிவராமபுரத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா மடத்தில் 23 கிலோ எடை கொண்ட இரண்டு வெண்கல சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த சிவராமபுரம் அக்ரஹாரத்தில் ஸ்ரீராகவேந்திரா மடம் உள்ளது. ஆசிரம காப்பாளர் மணி ஆசிரமத்திற்கு வந்த போது, கதவின் பூட்டு உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் உள்ளே சென்று பார்த்தபோது ஆசிரமத்தில் இருந்த போத்தனூர் வீரபிரம்மன சிலை (அரை அடி உயரம் 8 கிலோ), ராஜராஜேஸ்வரி சிலை (முக்கால் அடி உயரம் 15 கிலோ எடை) ஆகிய இரண்டு வெண்கல சிலைகள் திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, சென்னையில் இருந்து வந்த ஆசிரமத்தின் உரிமையாளர் ஹரிகணேஷ் அளித்த புகாரின் பேரில், குத்தாலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சிலைகள் ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தங்கக் கடத்தல் வழக்கு: முதலமைச்சர் பினராயி விஜயனின் உதவியாளரிடம் விசாரணை!