ETV Bharat / jagte-raho

உளுந்தூர்பேட்டை தனியார் உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை! - கள்ளக்குறிச்சி குற்றச் செய்திகள்

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் உணவகத்தின் பூட்டை உடைத்து, 5 லட்சம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளயடித்துச் சென்றனர்.

தனியார் உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை

author img

By

Published : Jan 2, 2021, 5:49 PM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே பிரபல தனியார் உணவகம் ஒன்று உள்ளது. நேற்று (ஜன.02) இரவு, கணக்கு வழக்குகளை முடித்து விட்டு ஊழியர்கள் உணவகத்தை பூட்டி விட்டு சென்றனர். கடையில் இரவு காவலாளி அர்ஜூனன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், இரவு 12 மணியளவில் ஹோட்டலின் பின்பக்க கதவை உடைத்து கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், உணவகத்தின் லாக்கரை உடைத்து அதிலிருந்து, 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடுத்து சென்றனர்.

இன்று (ஜனவரி 2) காலையில், ஊழியர்கள் மீண்டும் கடையை திறந்து பார்த்த போது லாக்கரில் இருந்த ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து கடையின் ஊழியர்கள், உளுத்தூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடனும், ஹோட்டலிலுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு பணத்தை கொள்ளையடித்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.